53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு எனக்கு பிடித்த படம் இது தான்...! கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்..!
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர் மற்றும் நடிகர் சங்க தலைவர் விஷால் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவுள்ள திரைப்படம் சண்டக்கோழி 2. இப்படம் விஷாலின் 25வது படமாக வெளிவரவுள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த பாடத்தையும் இயக்குனர் லிங்குசாமி தான் இயக்குகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் இன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் விழாவில் கலந்து கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ், நான் இந்த படத்தில் நடித்ததில் மிகவும் சந்தோச படுகிறேன் என்றும், இந்த படத்தில் எனக்கு கொடுத்த கேரக்டர் மிகவும் பிடித்திருந்தது எனவும், மேலும் நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு எனக்கு மிகவும் பிடித்த கேரக்டர் எனவும் கூறினார்.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு அடுத்ததாக வெளிவர இருக்கும் திரைப்படம் "சர்க்கார்" என்பது குறிப்பிடத்தக்கது.