#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கீர்த்தி சுரேசிற்கு கல்யாணமா.. அவசர திருமணத்திற்கான காரணம் என்ன என்று ரசிகர்கள் கமெண்ட்.?
தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். சென்னையை பூர்விகமாக கொண்ட கீர்த்தி சுரேஷ், முதன்முதலில் 'இது என்ன மாயம்' என்ற திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் கீர்த்தி சுரேஷின் நடிப்பு திரைத்துறையில் பாராட்டைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தொடரி, ரஜினி முருகன், பாம்பு சட்டை, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் போன்ற திரைப்படங்களில் முக்கிய நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்திருந்தார். இவரின் நடிப்பாலும், அழகாலும் மக்களின் மனதில் இடம்பெற்று தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்தார்.
கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜயுடன் காதலில் இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்ட நிலையில், தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொழிலதிபர் ஒருவருடன் புகைப்படம் எடுத்து பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வந்தது.
இதனையடுத்து கீர்த்தி சுரேஷிற்கு இந்த தொழிலதிபர் திருமணம் நடக்கவிருக்கிறது என்று கோலிவுட் திரைத்துறையினர் கிசுகிசுத்து வருகின்றனர். கீர்த்தி சுரேஷிற்கு உண்மையாகவே கல்யாணமா என்று நெட்டிசன்கள் வருத்தத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.