மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனாவால் பாதிக்கபட்ட நடிகர் கருணாஸின் தற்போதைய நிலை என்ன? அவரது மகன் கென் வெளியிட்ட புதிய தகவல்!
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் கருணாஸ். இவர் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.வுமாகவும் உள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் கருணாஸ்க்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது கருணாஸின் பாதுகாவலருக்கு கொரோனா உறுதியான நிலையில், கருணாஸ்க்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து கருணாஸ் திண்டுக்கல்லில் உள்ள அவரது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் நடிகர் கருணாஸின் மகன் கென், தனது தந்தையின் உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என் தந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை நீங்கள் அறிந்திருப்பீர்கள. அவர் ஒரு அரசியல்வாதி, சமூக சேவையாளர் என்பதால் கடந்த காலங்களில் தனது தொகுதி மற்றும் பல இடங்களுக்கு சென்று வந்தார். இதனால் அவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளோம். மேலும் எனது தந்தையுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா வைரஸ் சோதனை செய்து கொள்ளுங்கள் என கென் கருணாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.