திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகை ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டாரா? டிஜிபி வெளியிட்ட திடுக்கிடும் ரகசியங்கள்!!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் அறிமுகமானார் நடிகை ஸ்ரீதேவி. இவர் கமல், ரஜினியுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்த இவற்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களிலும் சுமார் 300 படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் நாள் துபாயில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக சென்றபோது தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து மர்மமான முறையில் ஸ்ரீதேவி மரணமடைந்தார்.மேலும் மது போதை அதிகமாகி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்ததாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல ஒரு திட்டமிட்ட கொலை என கேரள டிஜிபி ரிஷிராஜ் சிங் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது மறைந்த கேரள காவல்துறையின் மருத்துவ ஆலோசகர் மாற்றுக தடயவியல் மருத்துவ பேராசிரியர் டாக்டர் உமாநாத், ஸ்ரீதேவியின் மரணம் குறித்து பல தகவல்களை கூறியதாக டிஜிபி ரிஷிராஜ் சிங் கூறியுள்ளார். அப்பொழுது ஸ்ரீதேவி அதிகமாகக் குடித்துவிட்டு தண்ணீர் தொட்டியில் விழுந்திருந்தாலும்,வெறும் ஒரு அடி உயரமே இருக்கும் தண்ணீரில் மூழ்கியிருக்க முடியாது.
வேறு யாராவது அவரது தலையை தண்ணீரில் பிடித்து அழுத்தினால் மட்டுமே ஒரு அடி தண்ணீரில் நிச்சயம் ஸ்ரீதேவி மூழ்கி உயிரிழந்திருக்க முடியும் என்று தெரிவித்ததாக டிஜிபி கூறியுள்ளார். மேலும் போதிய ஆதாரங்கள் கிடைக்காததால் ஸ்ரீதேவியின் மரணம் மர்ம மரணமாக முடிந்துவிட்டது என்றும் கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.