மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கே.ஜி.எப் நடிகரை வளைத்து போட்ட தமிழ் பட இயக்குனர்... கோலிவுட் திரைஉலகமே அதிர்ச்சி!?
இந்திய திரையுலகையே அசர வைத்த திரைப்படம் கே ஜி எஃப் என்றால் அது மிகையாகாது. இப்படம் கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. இதையடுத்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் என அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. இதன் முதல் பாகம் வெற்றி பெற்று வசூலை குவித்தது. இரண்டாம் பாகமும் எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றியைக் கொடுத்தது.
கே ஜிஎஃப் திரைபடத்தில் நடித்த ஹீரோ யாஷ்க்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தாலும் சரியான கதைக்காக காத்திருந்தார்.ரசிகர்களும் இவரின் அடுத்த படத்திற்காக ஆவலோடு எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் தமிழ் பட இயக்குனர் ஒருவர் தனது படத்திற்கு நடிக்க சம்மதம் வாங்கி இருக்கிறார்.
தமிழில் நடிகர் விஷால் நடித்து வெளியான இரும்புத்திரை என்ற படத்தின் அறிமுக இயக்குனர் பி எஸ் மித்ரன். அதன் பின்பு சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ மற்றும் கார்த்தி நடித்த சர்தார் போன்ற திரைப்படங்களை இயக்கினார். இவர் இயக்கிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெற்றியை அளித்ததால் பிஎஸ் மித்ரன் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
பிரெஸ்டிஜ் குரூப் தயாரிப்பு ரியல் எஸ்டேட் நிறுவனம், யாஷ் நடிக்கவிருக்கும் இப்படத்தை தயாரிக்கின்றனர்.
இந்த அறிவிப்பு கோலிவுட் திரையுலகில் பெரிய இயக்குநர்களை பொறாமை பட வைத்துள்ளது. மேலும், யாஷின் ரசிகர்கள் இப்படத்திற்காக ஆர்வமாக காத்து கொண்டு இருக்கின்றனர்.