மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெண்களிடம் பேசுவதற்கு 10 வருட போதை பழக்கம் - கே.ஜி.எப் நடிகர் அதிர்ச்சி பேட்டி..!
பெண்களிடம் பேசுவதற்கு பயமாக இருந்ததால், தொடக்கத்தில் அந்த பயத்தை போக்க போதைப்பொருளை உபயோகப்படுத்தினேன் என கே.ஜி.எப் நடிகர் பேட்டியளித்தார்.
அக்னிபாத் திரைப்படத்தில் கஞ்சா கடத்தல் கும்பல் தலைவனாக நடித்த சஞ்சய் தத், நீண்ட வருடங்களுக்கு பின்னர் கே.ஜி.எப் திரைப்படத்தில் தனது வில்லன் கதாபாத்திரத்தை பிரம்மிக்க வைக்கும் அளவு வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் போதைப்பொருள் பழக்கம் தொடர்பாக கூறினார்.
இந்த பேட்டியில், "நான் முதலில் கூச்ச சுபாவம் கொண்டவனாக இருந்தேன். அப்போது, பெண்களிடம் பேச வேண்டும் என ஆசை இருந்தாலும், என்னுள் இருந்த பயம் அதனை தடுத்தது. அதனை மீறி செயல்பட போதைப்பொருளை உபயோகம் செய்ய சொல்லி சிலர் என்னிடம் தெரிவித்தார்கள். மேலும், அதனால் யாரிடமும் இயல்பாக பேச முடியும் என்றும் கூறினார்கள்.
நானும் 10 வருடங்கள் அதனை உபயோகம் செய்தேன். அது இல்லாமல் நான் இல்லை என்ற வகையில், குளியலறையில் முதற்கொண்டு அதனை உபயோகம் செய்துள்ளேன். தாமதமாகத்தான் அதன் விளைவுகள் புரியவைத்தது. இப்போது அதனை விட்டுவிட்டேன். அந்த 10 வருடங்கள் எனது படிப்பில் கூட கவனம் செலுத்தவில்லை" என்று தெரிவித்தார்.