மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட்ராசக்க... கார்த்தியின் வெற்றி பட இயக்குனருடன் கேஜிஎஃப் ஹீரோ... விபரம் என்ன.?
கேஜிஎஃப் 1&2 திரைப்படங்களின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர் நடிகர் யாஷ். இந்தத் திரைப்படத்திற்கு முன்பு கன்னடத்தில் மட்டுமே அறியப்பட்ட நடிகர் தற்போது பான் இந்தியா ஹீரோவாக வலம் வருகிறார்.
இவரது நடிப்பில் உருவான கேஜிஎப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உலக அளவில் 1500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் பிறகு வேறு எந்த படங்களிலும் கமிட் செய்யாமல் இருந்து வருகிறார் நடிகர் யாஷ். தற்போது இவரது அடுத்த படத்தினை பற்றிய செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
மேலும் இந்த திரைப்படத்தில் அவர் தமிழ் இயக்குனருடன் இணைய இருக்கிறார் என்பது தான் ஸ்பெஷல். அர்ஜுன் மற்றும் விஷால் நடிப்பில் உருவான இரும்புத்திரை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிஎஸ் மித்ரன். இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் சர்தார் என்ற திரைப்படத்தை இயக்கினார்.
இந்த இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் கேஜிஎஃப் நாயகன் யாஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் இதனைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழ் சினிமா ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.