திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரசிகர்களை ஏமாற்றிய குஷ்பூ.. அதிர்ச்சியில் கமெண்ட் செய்த நெட்டிசன்கள்.?
90களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர் குஷ்பு. ரஜினி, கமல், பிரபு, கார்த்திக் என முன்னணி ஹீரோக்களுடன் இவர் அப்போது நடித்தார்.
குஷ்புவுக்கு ரசிகர்கள் கோயில் கட்டியது அப்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இடையில் இவர் இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்துகொண்ட பிறகு, சீரியல்களிலும், சினிமாவிலும் அக்கா, அண்ணி வேடங்களிலும் நடித்து வந்தார்.
தற்போது தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினராக உள்ள குஷ்பு, பாஜகவில் இணைந்து தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் குஷ்பு, சமீபத்தில் டாம் பாய் ஹேர் கட்டில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள், 'முடியை ஏன் வெட்டினீங்க?' என்றும், "இந்த ஹேர் ஸ்டைல் உங்களுக்கு நல்லா இருக்கு' என்று கமெண்ட் செய்திருந்தனர். அதற்கு பதிலளித்த குஷ்பு, 'நான் முடியை வெட்டவில்லை, அது சும்மா டெஸ்ட் ஷூட்" என்று கூறியுள்ளார்.