தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
கோயிலுக்குள் நடந்த மோசமான காட்சி.! இந்து மதத்தை அவமதிப்பாக எழுந்துவரும் கண்டனங்கள்! ட்ரெண்டாகும் ஹேஸ்டேக்!!
கொரோனா அச்சுறுத்தலால் சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. திரையரங்குகள் மூடப்பட்டதால் ஏற்கனவே எடுத்து முடிந்த திரைப்படங்களை திரையிடமுடியாமல் இருந்தது. பின்னர் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் போன்ற ஓடிடி தளங்கள் மூலம் சினிமாக்கள் மற்றும் பல வெப் சீரிஸ் வெளியாகி வருகின்றன.
ஓடிடி தளங்களில் வெளியாகும் வெப் சீரிஸ், படங்களுக்கு தணிக்கை இல்லை என்பதால் பல காட்சிகள் நேரடியாகவே வைக்கப்படுகின்றன. தணிக்கை இல்லை என்பதால் அதிக ஆபாசக் காட்சிகள் இடம்பெறுவதாகவும் எனவே தணிக்கை அவசியம் என்ற கோரிக்கையும் எழுந்துவந்தது.
Many films, web series and advertisements target to our Hindu Dharma, these things are created against us how long will you only get angry on social media? When will the government take action on this?Why a web series is not made on Hindu boys with Muslim girls?#BoycottNetflix pic.twitter.com/hwllFhLFIa
— Yash Deshmukh (@YashDes63836442) November 22, 2020
சமீபகாலமாக நெட்ப்ளிக்ஸ் போன்ற தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் மதம், சமுதாயம் போன்ற விஷயங்களை தவறாக சித்தரிப்பதாக கூறி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன. இந்நிலையில், தற்போது ட்விட்டரில் #BoycottNetflix என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது.
இந்து பெண்ணும், இஸ்லாமிய இளைஞரும் கோயில் ஒன்றில் முத்தமிட்டுக் கொள்வதை போன்ற காட்சி A Suitable Boy வெப்சீரிஸில் இடம்பெற்றுள்ளது. இந்தக்காட்சி இந்து மதத்தை அவமதிப்பாக எடுக்கப்பட்டுள்ளதாக பலரும் இணையத்தில் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். எனவே இந்த தொடர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பலர் ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து #BoycottNetflix என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.