மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நயன்தாராவின் கொலையுதிர் காலம் படத்திற்கு எழுந்துள்ள புதிய சிக்கல்; விழிபிதுங்கும் படக்குழு.!
நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நயன்தாரா. அதன்பின்னர் ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
புகழின் உச்சத்தில் உள்ள நயன்தாரா அனைவராலும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அளவிற்கு வளந்துவிட்டார். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சக்ரி டாலட்டி இயக்கிய ”கொலையுதிர் காலம்” என்ற திகில் படத்திலும் நயன்தாரா நடித்துள்ளார். இதில் பிரதாப் போத்தன், பூமிகா, ரோகிணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தொடர்ந்து எட்செக்ட்ரா மற்றும் ஸ்டார் போலாரிஸ் நிறுவனங்கள் இப்படத்தை தயாரித்துள்ளது. இதன் டிரைலரும் வெளியாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவல் தான் கொலையுதிர் காலம். இந்த நாவலை விடியும் முன் புகழ் இயக்குனர் பாலாஜி குமார், சுஜாதாவின் மனைவியிடம் இருந்து ரூ.10 லட்சத்திற்கு தனது அம்மாவின் பெயரில் வாங்கியுள்ளார். இந்நிலையில், பாலாஜி குமார் தனது தாயார் பெயரில் உரிமம் பெற்றுள்ள கொலையுதிர் காலம் படத்தை இதே டைட்டிலில் வெளியிடுவது காப்புரிமையை மீறிய செயல். எனவே இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்தார்.
Since #KolaiyuthirKaalam is getting postponed to another date, #NGK will have very good screen counts across TN for its 3rd week blockbuster run from tomorrow 👍👍
— Tamilnadu Theatres Association (@TN_Theatres) June 13, 2019
A set of New films #GameOver, #NenjamunduNermaiyunduOduRaja & #SuttuPidikkaUtharavu will be releasing tomorrow!
இப்படம் இன்று (14ம் தேதி) வெளியாக இருந்தது. படத்திற்கான முன்பதிவு தொடங்கி விட்டது. இந்த நிலையில், இப்படத்தை இன்று வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இப்படத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டதோடு, வரும் 21ம் தேதிக்குள் இந்த மனு குறித்து பதிலளிக்கும்படி படத்தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.