திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான திரைப்படம் தேர்வு.! பட குழுவினர் மகிழ்ச்சி.!
சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கொட்டுக்காளி என்ற திரைப்படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் சூரி கதாநாயகனாக நடித்திருக்கிறார் பி.எஸ்.வினோத்ராஜ் என்பவர் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே கூழாங்கல் என்ற திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படம் 74 ஆவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் உலக திரைப்படங்களுக்கான பிரிவில் தேர்வாகிவுள்ளதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.
இந்த திரைப்படத்தை உலக தரத்தில் இயக்கியுள்ள இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் மற்றும் நடித்துள்ள சூரி அண்ணன், அன்னாபென் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த அன்பும், மகிழ்ச்சியும், பாராட்டுக்களும். பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவின் பிரத்யேக திரையிடலுக்கு தேர்வாகியுள்ள முதல் தமிழ் திரைப்படம் நமது கொட்டுக்காளி என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
இதுபோன்றதொரு பெருமைக்குரிய படைப்பை தயாரிக்க உத்வேகமளித்து அதை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லவும், ஊக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் எனது அன்பிற்குரிய ரசிகர்களாக உங்களுக்கே அனைத்து பெருமையும் சேரும். என தெரிவித்துள்ளார்.