மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சன் டீவி நாயகி சீரியலில் வரும் மிகப்பெரிய மாற்றம்..! இனி ஹீரோ, ஹீரோயின் இவங்கதானாம்.?அப்போ வித்யா பிரதீப்.?
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான தொடர்களில் ஒன்றான நாயகி தொடரின் நாயகனும், நாயகியும் மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான தொடர் நாயகி. தொடரின் நாயகனாக திருவும், நாயகியாக வித்யா பிரதீப்பும் நடித்துவருகின்றனர். மிகவும் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருந்த இந்த தொடர், ஊரடங்கு உத்தரவால் தடைபட்டுள்ளது. தற்போது தமிழக அரசு சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கியதை அடுத்து அனைத்து தொடர்களும் மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பிறகு பிடித்த சீரியல்களை பார்க்க மக்கள் ஆவலுடன் உள்ள நிலையில், நாயகி தொடரின் நாயகன் மற்றும் நாயகி இருவரும் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு பதில், திரு கதாபாத்திரத்தில் தெய்வமகள் புகழ் பிரகாஷும், ஆனந்தி கதாபாத்திரத்தில் லட்சுமி ஸ்டோர்ஸ் புகழ் நக்ஷத்ராவும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நக்ஷத்ரா நடிக்க இருப்பதாக கூறப்படும்நிலையில், தொடரின் முழு கதைக்களமும் மாறுகிறதா? அல்லது இவர்களின் கதாபாத்திரம் என்ன? ஆனந்தி, திரு காதாபாத்திரம் என்ன ஆக போகிறது என ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் எழுந்துள்ளது.