திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நடிகர் சுந்தர் சி மருத்துவமனையில் திடீர் அனுமதி! வருத்தத்துடன் குஷ்பு வெளியிட்ட பதிவு!!
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவ துவங்கி சாமானிய மக்கள் முதல் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும் ஏராளமான உயிரிழப்புகளும் நேர்ந்தது. இவ்வாறு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வந்த கொரோனா பரவல் சிறிது குறைந்திருந்த நிலையில் தற்போது இரண்டாவது அலை தீவிரமாக பரவத் துவங்கியுள்ளது.
இந்நிலையில் தற்போது, நடிகை குஷ்புவின் கணவரும், இயக்குனருமான சுந்தர்.சியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Hi, my husband #SundarC has tested #Covid19 positive today eve. He is doing well but admitted in hospital for precautionary measures. Request anyone who has been in contact with him to please isolate yourself and get tested immediately. Pls prayer for his speedy recovery. 🙏🙏🙏
— KhushbuSundar ❤️ (@khushsundar) April 10, 2021
இந்த நிலையில் இதுகுறித்து நடிகை குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், எனது கணவர் சுந்தர்.சி-க்கு கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. அவர் நலமாக உள்ளார். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறோம். மேலும் சுந்தர் சி விரைவில் குணமடைய பிரார்த்திக்க வேண்டியும் குஷ்பு தெரிவித்துள்ளார்.