#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
28 வருடங்களுக்கு பிறகு குஷ்புவுக்கு அடித்த அதிர்ஷ்டம்! தீயாய் பரவும் வீடியோ!
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகை குஷ்பூ. ரஜினி, கமல், சத்யராஜ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். என்னதான் வயதாகியிருந்தாலும், இன்று வரை இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
முன்னணி நடிகையாக இருந்த இவர் பிரபல இயக்குனர் சுந்தர் சி அவர்களை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்கை, அரசியல் என பிஸியாகிவிட்டார். கிட்டத்தட்ட கடந்த 9 வருடங்களாக தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்த இவர் தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க உள்ளார்.
அதுவும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். இதுபற்றி வீடியோ வெளியிட்டுள்ள நடிகை குஷ்பூ, 9 வருடம் காத்திருந்ததற்கான பலன் கிடைத்துள்ளதாகவும், இந்த வாய்ப்பு மக்கள் மத்தியில் ஒரு சிறந்த பெயரை எடுத்து கொடுக்கும் என்றும் உணர்வு பூர்வமாக குறிப்பிட்டுள்ளார்.
கிட்டத்தட்ட 28 வருடங்களுக்கு பிறகு குஷ்பு ரஜினிக்கு ஜோடியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.