திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
26 வருஷமாச்சு.. செம ஹேப்பியில் நடிகை!! அப்படியென்ன ஸ்பெஷலான விசேஷம் இன்று தெரியுமா??
தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை குஷ்பூ. வருஷம் 16 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அவர் அதனை தொடர்ந்து தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் தற்போது தமிழ் சினிமாவில் குணசித்திர வேடங்களிலும், பின்னர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். இறுதியாக அவர் லட்சுமி ஸ்டோர் என்ற தொடரில் நடித்து இருந்தார். இந்தநிலையில் குஷ்பு கடந்த 2000 ல் இயக்குனரும், நடிகருமான சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரு மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று நடிகை குஷ்புவின் கணவர் சுந்தர் சி அவருக்கு காதலை தெரிவித்து 26 ஆண்டுகள் ஆகும் நிலையில் அதனை மிகவும் மகிழ்ச்சியுடன் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர், சுந்தர் சி காதலைத் கூறி இன்றுடன் 26 ஆண்டுகள் ஆகிறது. அப்போது எது உங்களது காதலை உடனே ஏற்க வைத்தது என்று எனக்கு தெரியவில்லை. அந்த மாதிரியான நேரத்தில் உள்ளுணர்வை நம்பி எடுக்கும் முடிவு சிறப்பாக அமையும். அதையேதான் நானும் செய்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.