திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"சேரி சொன்னதுக்கு எல்லாம் சாரி கேக்க முடியாது!" குஷ்பு தடாலடி பதில்!
1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரை வாழ்க்கையை தொடங்கியவர் குஷ்பு. தொடர்ந்து 1989ம் ஆண்டு "வருஷம் 16" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ் மட்டுமல்லாது கன்னடம், மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார் குஷ்பு.
இவர் சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா குறித்து பேசியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில் "தி மு க குண்டர்கள் இப்படி மோசமான மொழியைத் தான் பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது இது தான்.
சாரி, என்னால் உங்களைப் போல் சேரி மொழியில் பேசமுடியாது" என பதிவிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, சமூக வலைத்தளங்களில் பலரும் குஷ்புவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் குஷ்பு.
அப்போது அவர், "சேரி என்பதை நான் பகடியாக கூறினேன். அதற்கு பிரெஞ்சு மொழியில் அழகு என்று அர்த்தம். ஒரு பெண்ணை பார்த்து தகாத வார்த்தைகள் பேசுபவரைக் கேட்காமல் என்னை ஏன் கேட்கிறார்கள்? என்னால் இதற்கு வருத்தம் தெரிவிக்க முடியாது" என்று கூறினார்.