#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
28 வருஷங்களுக்கு பிறகு மறுபடியுமா? பிரபல முன்னணி நடிகருடன் ஜோடிசேரும் குஷ்பூ! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை குஷ்பூ. மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டு தற்போது தமிழ் பெண்ணாகவே மாறிவிட்டார்.
நடிகை குஷ்பூ ரஜினி, கமல்,பிரபு,சத்யராஜ் என பல பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதனை தொடர்ந்து தற்போது முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.மேலும் வெள்ளித்திரையில் அசத்தி வந்த குஷ்பூவின் கவனம் சின்னத்திரை பக்கம் திரும்பிய நிலையில் அவர் ஏராளமான தொடர்களில் நடித்தார். மேலும் தற்போது சன் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகிவரும் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.
நடிகை குஷ்பு 1992 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற அண்ணாமலை திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் தலைவர்168 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தர்பார் திரைப்படம் பொங்கலுக்கு வெளிவர உள்ள நிலையில், நடிகர் ரஜினி அடுத்ததாக வீரம் விசுவாசம் போன்ற படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் 28 வருடங்களுக்கு பிறகு மீண்டும் குஷ்பு, ரஜினியுடன் ஜோடி சேர இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. மேலும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.