மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாமியாரின் ஆசையை நிறைவேற்றிய குஷ்பு.. நெகிழ்ச்சியில் நெட்டிசன்கள்.!
தமிழ் திரை உலகில் பிரபலமான நடிகையாக இருப்பவர் குஷ்பூ. இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்திருக்கிறார். தமிழில் முன்னணி நடிகர்கள் இணைந்து பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்திருக்கிறார்.
இவர் நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்து இருக்கிறார். மேலும் குஷ்புவின் ரசிகர்கள் இவருக்கென்று தனி கோவில் கட்டி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முதன்முதலாக ஒரு நடிகைக்கு கோவில் கட்டி இருப்பது இவருக்காக மட்டுமே. இப்போது பட வாய்ப்பு குறைந்து வருவதால் அரசியலில் ஈடுபட்டு வருகிறார் குஷ்பு.
இதுபோன்ற நிலையில், நடிகை குஷ்புபின் மாமியாருக்கு கிரிக்கெட் வீரர் தோனியை சந்திக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம். இதனை சமீபத்தில் நிறைவேற்றியிருக்கிறார். குஷ்புவின் மாமியாரும் தோனியும் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.