திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
உனக்கு வெக்கமா இல்ல?.. நீயா பணம் குடுத்த?.. குஷ்பூவின் பதிலால் கதிகலங்கிய கமெண்ட் செக்க்ஷன்..!!
பிரபல முன்னணி நடிகை மற்றும் பாஜக தேசிய உறுப்பினராக இருப்பவர் குஷ்பூ. இவர் 90களில் தொடங்கி கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். இவரது படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
சின்னதம்பி முதல் அண்ணாமலை, நாட்டாமை என்று தமிழில் பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர். இதுவரையிலும் ஒரு நடிகைக்கு கோவில் கட்டியது என்றால் அது குஷ்பூவுக்கு மட்டும்தான். அந்தளவு ரசிகர்களின் மத்தியில் கனவு கன்னியாக வலம் வந்துள்ளார். இவர் 1980ல் சினிமா துறையில் நுழைந்து தென்னிந்திய திரையுலகில் பிரபலமான கமல், ரஜினி ஆகியோருடன் நடித்துள்ளார்.
தனது 20 வருட திரைப்படத்திற்கு பின் இயக்குனரான சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்பும் சினிமாவில் அவர் நடிக்க தவறியதில்லை. பல படங்களிலும் கதாநாயகியாக நடித்து வந்த அவர், பின் அக்கா போன்ற கதாபாத்திரங்களிலும் நடித்தார்.
இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னதாக அதிக உடல் எடையுடன் இருந்த குஷ்பூ யோகா, உடற்பயிற்சி என்று கடும் கட்டுப்பாடுகளுக்கு பின் தனது உடலை வெகுவாக குறைத்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதனை பார்த்த பலரும் கலவையான கமெண்ட்களை செய்து வந்தனர்.
இவ்வாறு அவர் சமூக வலைத்தளபக்கத்தில் புதிய புகைப்படத்தை வெளியிடவே, அதற்கு குஷ்பூவை கிண்டல் செய்வதாக நினைத்து ஒருவர் பதிவிட காரசார பதிலடி கொடுத்துள்ளார். தற்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை குஷ்பூ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
அதில் ஒருவர், "பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தான் முகத்தை அழகாக காண்பிக்க வேண்டுமா?" என்று கேட்டிருந்தார். அதற்கு தக்க பதிலடியாக பிளாஸ்டிக் சர்ஜரிக்கு நீங்க பணம் கட்டுனீங்களா?, உங்களுக்கு வெக்கமா இல்லையா? என்று காரசாரமாக பதிலடி கொடுத்துள்ளார்.