மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாகார்ஜூனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகை குஷ்பூ! அவர் பகிர்ந்த செல்பி புகைப்படம்!
நாகார்ஜூனா ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் ஆந்திரத் திரைப்படத்துறையில் சிறந்து விளங்குகிறார். மேலும், ஒரு சில பாலிவுட் மற்றும் தமிழ் படங்களிலும் பணியாற்றியிருக்கிறார். நாகார்ஜூனா தெலுங்கில் நடித்து அந்த படம் தமிழில் டப்பிங் ஆகி 30 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த "உதயம்", "இதயத்தை திருடாதே" ஆகிய இரண்டு படங்கள் தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
இதனையடுத்து தமிழ் சினிமாவில் நாகார்ஜூனா நேரடியாக நடித்த 'ரட்சகன்' படம் ஓடாவிட்டாலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்த 'தோழா' படம் வெற்றிப்படமாக அமைந்தது.
Wishing you a very happy birthday Nag. Loads of love nd best wishes.. 💐💐💐🎂🎂🎂❤❤❤❤🤗🤗🤗🤗🤗🥰🥰🥰🥰🥰 @iamnagarjuna pic.twitter.com/j2fMTA2LT3
— KhushbuSundar ❤️ (@khushsundar) August 28, 2020
நாகார்ஜுனாவுக்கு இன்று 61 வயது பிறக்கிறது. இன்று பிறந்தநாள் காணும் அவருக்கு சினிமாத்துறையினர், ரசிகர்கள் என பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை குஷ்பூ அவருடன் செல்பி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, "இனிய வாழ்த்துக்கள் நாக். லாட்ஸ் ஆப் லவ் அண்ட் பெஸ்ட் விஸ்ஸஸ்" என பதிவிட்டுள்ளார்.