திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
எழில் கொஞ்சும் நடனம்... ரசிகர்களை 90ஸ்க்கே இழுத்துச் சென்ற குஷ்பூ ..... வைரலான வீடியோ !
80களின் இறுதியில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 90களில் சினிமா ரசிகர்களை தன் அழகாலும் நடிப்பாலும் கட்டிப்போட்டவர் குஷ்பூ. வருஷம் 16 மற்றும் சின்னத்தம்பி ஆகிய திரைப்படங்களின் மிகப்பெரிய வெற்றியால் ரசிகர்கள் பூஜித்து கொண்டாடக்கூடிய நடிகையாக உயர்ந்தார்.
தமிழ் சினிமாவில் எந்த நடிகைக்கும் இல்லாமல் குஷ்புவிற்கு கோவில் கட்டினார்கள் என்றால் அவர் மீது ரசிகர்கள் எவ்வளவு பக்தியாக இருந்தார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். தற்போது சின்னத்திரையிலும் சினிமாவில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.
தேசியக் கட்சியில் இணைந்து தீவிரமான அரசியல் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். சமூக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களையும் நடனங்களையும் பதிவேற்றி ரசிகர்களுக்கு பழைய நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொண்டு இருக்கிறார்.
To all #Ranadheera fans out here!! #Ranadheera introduced me to Kannada and gave me millions of fan following, overwhelming appreciation, love that cannot be defined in words! I will always be indebted to Kannada audience for this and more. As our fav Ravichandran Sir celebrates… pic.twitter.com/JHiKsLvZVn
— KhushbuSundar (@khushsundar) May 30, 2023
அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டு இருக்கும் ஒரு நடன வீடியோ ஒன்று ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. கன்னட திரைப்படமான ரணதீரா என்ற திரைப்படத்தின் பாடலுக்கு குஷ்பூ நடனமாடும் வீடியோ தான் ரசிகர்களிடம் வைரலாகி உள்ளது.