கொரோனா பாதிப்பால் பிரபல தமிழ் நடிகர் மரணம்! சோகத்தில் மூழ்கிய சினிமாத்துறை! வருத்தத்துடன் இரங்கல் தெரிவித்த நடிகை குஷ்பு!



kushbu-sadly-tweet-about-florent-pereira-dead

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் ஃப்ளோரன்ட் பெரைரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். புதிய கீதை படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். பின்னர்  பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார் ஃப்ளோரன்ட் பெரைரா.

நடிகர் ஃப்ளோரன்ட் பெரைராவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென உடல்நிலை மோசமாகியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு காலமானார். அவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள் இணையம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இந்தநிலையில் நடிகை குஷ்பு அவரது ட்விட்டர் பக்கத்தில், "எப்போதும் சிரித்த முகம், மென்மையான மனிதர், அதிக கடவுள் பக்தி, நேர்மையான மற்றும் கடின உழைப்பாளி. அவரது மரணம் ஈடுசெய்ய முடியாத இழப்பு, ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.