மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லட்சுமிமேனா இது.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே.?
தமிழ் திரையுலகில் அறியப்படும் நடிகையாக இருப்பவர் லட்சுமிமேனன். இவர் முதன் முதலில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்த 'கும்கி' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே இவரின் நடிப்பின் மூலம் மக்கள் மனதை கவர்ந்தார்.
இதன்பின் சுந்தரபாண்டியன், ஜிகர்தண்டா, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், அவதாரம், றெக்க, புலிக்குத்தி பாண்டி போன்ற பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனது திறமையை நிலைநாட்டினார்.
சில காலமாக திரைப்படங்களில் நடிப்பிலிருந்து பிரேக் எடுத்துக் கொண்டார் லட்சுமிமேனன். தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். 'சந்திரமுகி 2' திரைப்படத்தில் லட்சுமிமேனன் நடித்துக் கொண்டிருக்கிறார் என்ற செய்திகள் வெளியாகி உள்ளன.
இது போன்ற நிலையில், சமீபத்தில் லட்சுமி மேனனின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இப்புகைப்படத்தில் ஆளே, அடையாளம் தெரியாமல் மாறிவிட்டார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறப்பட்டு வருகிறது.