மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சோ.. மறுபடியும் இப்படி மாறிட்டாங்களே! தொப்பையை காட்டி லட்சுமி மேனன் வெளியிட்ட வீடியோ!!
தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்து ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் கும்கி. இப்படத்தில் கியூட்டான ஹீரோயினாக நடித்து மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை லட்சுமிமேனன். இப்படத்தின் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.
அதனைத் தொடர்ந்து நடிகை லட்சுமி மேனன் சுந்தர பாண்டியன், பாண்டிய நாடு, மஞ்சப்பை, வேதாளம், குட்டிப்புலி, கொம்பன், மிருதன்,றெக்க மற்றும் இறுதியாக விக்ரம் பிரபுவுடன் நடித்து சன் டிவியில் நேரடியாக வெளிவந்த புலிக்குத்தி பாண்டி உள்ளிட்ட பல படங்களில் அசத்தலாக நடித்துள்ளார். பின்னர் அவருக்கு சரியான படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவர் சினிமாவில் இருந்து விலகி படிப்பில் ஆர்வம் செலுத்தினார்.
மேலும் இடையில் உடல் எடை அதிகரித்திருந்த லட்சுமி மேனன் பின்னர் உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறினார். இந்த நிலையில் லட்சுமிமேனன் தற்போது மீண்டும் சற்று எடை அதிகரித்துள்ளாராம். அதனை தொடர்ந்து அவர் தனது குட்டி தொப்பையை காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.