மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சர்ச்சையில் மூழ்கிய லட்சுமி குறும்பட நாயகிக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்தினம் பார்த்தேனே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை லட்சுமி பிரியா. அதனை தொடர்ந்து அவர் சுட்ட கதை, யாகாவாராயினும் நாகாக்க, மாயா போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்..
நடிகை லட்சுமி பிரியா தமிழ் மட்டுமின்றி மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இருப்பினும் பெருமளவில் வெளியே தெரியாத அவர் பெரும் சர்ச்சையை கிளப்பிய லட்சுமி என்ற குறும்படத்தில் நடித்ததன் மூலம் பெருமளவில் பிரபலமானார்.
அதாவது குடும்ப பெண்ணின் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்தகைய குறும்படத்தில் தகாத உறவு குறித்த கதை அமைக்கப்பட்டிருந்தது. இது பெண்களை இழிவுபடுத்துவதாக இருப்பதாக பெரும் விமர்சனங்கள் எழுந்தது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் லட்சுமி பிரியா நடித்ததன் மூலம் அவர் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து அவர் தியேட்டர் ஆர்டிஸ்ட் மற்றும் விவிஎஸ் லக்ஷ்மன் 281, டோன்ட் டெல் தே கவர்னர் போன்ற புத்தகங்களை எழுதிய பிரபல எழுத்தாளரான வெங்கட்ராமன் சீனிவாசன் என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் அவர்களது கோலாகலமான திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.