மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லால் சலாம் திரைப்படம்.! பட குழுவினர் எடுத்த அதிரடி முடிவு.!
ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய தந்தை ரஜினிகாந்தை வைத்து இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படம் மிக விரைவில் வெளியாகவுள்ளதாக இதற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டது. அதோடு பொங்கல் தினத்தன்று இந்த திரைப்படம் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
இந்த திரைப்படம் பொங்கல் தினத்தன்று திரைக்கு வரும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், எதிர்வரும் பொங்கல் தினத்தில் தனுஷின் கேப்டன் மில்லர், விஜய் சேதுபதியின் மேரி கிறிஸ்மஸ், சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படங்கள் திரைக்கு வரவிருக்கிறது.
ஆகவே லால் சலாம் திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியிடப்படும் என்பதிலிருந்து பின்வாங்கியிருக்கிறது அதோடு ஜனவரி மாதம் 26-ஆம் தேதி வெளியிடப்படவிருந்த தங்கலான் திரைப்படத்தின் வெளியிட்டு தேதியும் தள்ளி வைக்கப்பட்டிருப்பதால் அந்த தேதியில் லால் சலாம் திரைப்படத்தை வெளியிட பட குழு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.