திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
96 பட ஜானுவாக மாறி ஆட்டம்போட்ட லாஸ்லியா.! திரிஷா என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!!
பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.
முதல் பிக்பாஸ் சீசன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சீசன் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. எனவே இந்த சீனில் அனைத்து விஷயங்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து செயல்பட்டு வருகிறது பிக்பாஸ் குழு.
மேலும் பிக்பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் எப்பொழுதுமே பஞ்சம் இருக்காது. அதேபோல பிக் பாஸ் சீசன் மூன்றிலும் சர்ச்சைகளுக்கு எந்த பஞ்சமில்லை. மேலும் நாளுக்கு நாள் சண்டைகள் அதிகமாகிக்கொண்டே மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது.
இந்நிலையில் அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவருக்கும் பல முக்கிய பிரபலங்களின் கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டு, அவர்களைப் போல உடை அணிந்து நடனமாடும் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் லாஸ்லியாவிற்கு, 96 படத்தில் திரிஷா நடித்த ஜானு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து லாஸ்லியா அவரைப் போலவே உடை அணிந்து கட்டு கட்டு கீரை கட்டு என்ற பாடலுக்கு நடனமாடினார்.
இந்நிலையில் இதுகுறித்து நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்துள்ளார். அதில் ஜானு திருப்பாச்சி படத்தில் இடம்பெற்றுள்ள பாடலுக்கு நடனமாட உள்ளார் கண்டிப்பாக பார்க்கவும் என பதிவிட்டுள்ளார்.