திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
லாஸ்லியாவிற்கு அவரது அப்பா அனுப்பிவைத்த அசத்தலான கிப்ட்.! செம ஷாக்கான லாஸ்...
பிக்பாஸ் சீசன்மூன்று கமல்ஹாசன் சிறப்பாக தொகுத்து வழங்க 90 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இறுதி கட்டத்திற்கு சில வாரங்களே இருக்கும் நிலையில் இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிய ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர்.
இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது இறுதிக்கட்ட போட்டியாளர்களாக கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்சன், ஆகியோர் மட்டுமே கடினமாக உழைத்து வருகின்றனர்.மேலும் பிக்பாஸ் பட்டத்தை வெல்ல அனைவரும் முழு மூச்சுடன் போராடி வருகின்றனர். இந்நிலையில் நாளுக்கு நாள் மிகவும் கடுமையான டாஸ்குகளை கொடுத்து வருகிறார் பிக்பாஸ்.அதனையும் போட்டியாளர்கள் முழுமூச்சுடன் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் போட்டியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக பிக்பாஸ், சீசன் 2 போட்டியாளர்களாக மஹத் மற்றும் யாஷிகாவை பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக வரவழைத்துள்ளனர். அவர்கள் நுழைந்ததும் வீடே கலகலப்பானது.
அவர்கள் போட்டியாளர்கள் அனைவருக்கும் பரிசு பொருட்களை வழங்கினர் . அப்பொழுது லாஸ்லியாவிற்கு அவரது அப்பா பிக்பாஸ் வீட்டிற்குள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கிப்ட்டாக அனுப்பி வைத்தார்.அதனை கண்டதும் லாஸ்லியா மிகவும் உற்சாகம் அடைந்துள்ளார்