மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்பாஸின் பட வாய்ப்பை தட்டிப்பறித்த இளைய தளபதி விஜய்.. புலம்பி தள்ளிய அப்பாஸ்.?
இளையதளபதி விஜய் என்றாலே தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார் விஜய்.
விஜயின் ஆரம்ப காலங்களில், பல தோல்விப் படங்களைக் கொடுத்துள்ளார். அப்படிப்பட்ட சூழலில் தான் மலையாள இயக்குனர் பாசில் இயக்கத்தில் வெளிவந்த 'காதலுக்கு மரியாதை' திரைப்படத்தில் விஜய் நடித்தார். மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது இப்படம்.
மேலும் இப்படத்தில் தான் பேபி ஷாலினி கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் சிவகுமார், ஸ்ரீவித்யா, ராதாரவி , சார்லி, தாமு என்று பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். தற்போது காதலுக்கு மரியாதை படம் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, முதலில் காதலுக்கு மரியாதை படத்தில் ஹீரோவாக, 90களில் பிரபலமாக இருந்த 'அப்பாஸ்' தான் நடிக்கவிருந்தாராம். ஆனால் சில காரணங்களால் அப்பாஸால் நடிக்க முடியாமல் போகவே தான், விஜய் நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.