#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"விஜயின் தம்பிக்கே இந்த நிலைமையா?!" விஷ்ணு விஷால் செய்யும் அநாகரீக செயல்!
2009ம் ஆண்டு "வெண்ணிலா கபடிக்குழு" படத்தில் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இதையடுத்து நீர்ப்பறவை, ராட்சசன், பலே பாண்டியா, குள்ளநரிக்கூட்டம், முண்டாசுப்பட்டி, காடன், ஜீவா, மாவீரன் கிட்டு, கட்டா குஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
அதேபோல 1991ம் ஆண்டு "அழகன்" திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் விக்ராந்த். 2005ம் ஆண்டு "கற்க கசடற" படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து முதல் கனவே, நெஞ்சத்தை கிள்ளாதே, கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் "லால் சலாம்" படத்தில் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் விக்ராந்துக்கு ரஜினியின் மகன் கேரக்டர் என்று கூறப்படுகிறது. எனவே விக்ராந்துக்கு படத்தில் நிறைய சீன்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் விஷ்ணு விஷால், எனக்கும் அதே அளவு சீன் வேண்டும். இல்லையேல் விக்ராந்தின் சீன்களை குறையுங்கள் என்று கூறி வருகிறாராம். விக்ராந்த் நடிகர் விஜயின் சித்தி மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜயின் தம்பிக்கே இந்த நிலையா என்று அனைவரும் கருத்து கூறி வருகின்றனர்.