மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பார்க்கிங் பட நடிகை இந்துஜாவிற்கும், பிக்பாஸ் பூர்ணிமாவிற்கும் நடுவில் என்ன பிரச்சனை..
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். தற்போது இந்நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இதில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார் பூர்ணிமா ரவி. இவர் "அராத்தி" என்ற யூடியூப் சேனல் மூலம் மிகவும் பிரபலமானவர்.
இந்நிலையில் இவர் பிக் பாசுக்குள் வந்து மாயாவுடன் சேர்ந்து பிரதீப்புக்கு ரெட் கார்ட் காட்டியதில் பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டார். "மாயாவின் புல்லி கேங்" என்று சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறார் பூர்ணிமா.
தொடர்ந்து எலிமினேட் செய்யப்படாமல் காப்பாற்றப்பட்டு வரும் பூர்ணிமா, தனது யூடியூப் சேனல் மூலம் சம்பாதித்த பெயரையும், ரசிகர்களையும் பிக் பாஸில் இவர் நடந்து கொள்வதன் மூலம் இழந்துள்ளார். இந்நிலையில் இவரது நெருங்கிய தோழியான இந்துஜா பட ப்ரமோஷனுக்காக பிக் பாஸ் வீடு சென்றார்.
எல்லோரிடமும் சாதாரணமாக பேசிவிட்டு சென்ற இந்துஜா, பூர்ணிமாவை மட்டும் கண்டு கொள்ளவில்லை. இதை பூர்ணிமாவும் மாயாவிடம் சொல்லி புலம்பி இருக்கிறார். இதை தொடர்ந்து ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் இந்துஜா பூர்ணிமாவை அன்பாலோ செய்துவிட்டதாக கூறி வருகின்றனர்.