#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கட்சி ஆரம்பிக்கப் போகிறாரா விஜய்.? லோகேஷ் கனகராஜிற்கு என்ன பதவி தெரியுமா.?
கடந்த அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி, பெரும் வெற்றி பெற்று, பாக்ஸ் ஆபீசில் சாதனை படைத்து வருகிறது விஜய் நடித்துள்ள "லியோ" திரைப்படம். இதில் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஸ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், அனுராக் காஷ்யப் என பெரும் பட்டாளமே நடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படம் கடந்த 7 நாட்களில் 500 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. படம் வெளியான முதல் நாளிலேயே 140கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது லியோ.
திரைப்பிரபலங்கள் பலரும் பாராட்டி வரும் இப்படத்தின் வெற்றி விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விஜய் உட்பட படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். அப்பொழுது பத்து படம் முடிச்சுட்டு லோகேஷ் கனகராஜ் உங்க கட்சியில சேரும்போது என்ன பதவி கொடுப்பீங்க என்று கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதில் அளித்த விஜய் கற்பனையா தானே கேக்குறீங்க? லோகேஷ் கனகராஜிற்கு போதை பொருள் தடுப்பு பிரிவு மந்திரி பதவி தரப்படும் என்று காமெடியாக பேசினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.