திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
1லட்சம் போச்சே.! அபராதம் விதித்த நீதிமன்றம்.. மன்சூர் அலிகானுக்கு இது தேவையா!?
கடந்த அக்டோபர் மாதம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "லியோ" திரைப்படம் வெளியானது. படத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, கெளதம் மேனன், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்த போது, நடிகை த்ரிஷா அவதூறாகப் பேசினார். இதற்கு திரிஷா, குஷ்பூ, லோகேஷ் கனகராஜ், சிரஞ்சீவி உள்ளிட்ட பல்வேறு திரைத்துறை பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் மன்சூர் அலிகான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்திய நிலையில், மகளிர் காவல் நிலையத்தில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இவர் மன்னிப்பு கேட்டு, த்ரிஷாவும் மன்னித்துவிட்டதாக தெரியவந்தது.
இந்நிலையில் மீண்டும் மன்சூர் அலிகான், தான் பேசிய முழு வீடியோவையும் பார்க்காமல் தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாக குஷ்பு, திரிஷா, சிரஞ்சீவி ஆகியோர் மீது மான நஷ்டம் தொடர்ந்ததாகவும், இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டதாகவும் மன்சூர் அலிகானுக்கு 1 லட்சம் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.