மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"குடிகார அங்கிள் என்று கமலைத் திட்டிய பூர்ணிமா!" வீடியோ வைரல்!
ஸ்டார் விஜய் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்டது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன். எப்போதும் போல் இல்லாமல் இந்த சீசனில் இரண்டு வீடுகள் உள்ளன. வழக்கம்போல் இந்தமுறையும் கமலஹாசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியின் முன் நடந்த சீசன்களை விட எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்தே விதிமீறல்கள் நடந்து கொண்டுள்ளன. ஒரு பக்கம் மாயா மற்றும் பூர்ணிமா, இன்னொரு பக்கம் அர்ச்சனா மற்றும் விசித்ரா ஆகியோர் விதியை மீறி வருகின்றனர்.
கமலஹாசனும் தொடர்ந்து இந்த விதிமுறை மீறல்களைக் கண்டித்து வருகிறார். இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் விக்ரம் மற்றும் பூர்ணிமா இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டுள்ளனர். அப்போது பூர்ணிமா கடந்த வாரம் கமலஹாசன் தன்னிடம் கேள்வி கேட்டது குறித்துப் பேசியுள்ளார்.
அப்போது மிகவும் கோபத்தோடு விக்ரமிடம் பேசிய பூர்ணிமா, கமலை 'குடிகார அங்கிள்' என்று கூறியுள்ளார் பூர்ணிமா. இதைப் பார்த்த ரசிகர்கள் அந்த வீடியோவில் பூர்ணிமா பேசியதை கட் செய்து, பூர்ணிமா வெளியேறுவது நல்லது என்ற கேப்ஷனுடன் வைரலாக்கி வருகின்றனர்.