#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிவாஜி கணேசன் என் அண்ணனைப் போன்றவர்.! கடந்த 4 மதங்களுக்கு முன்பு லதா மங்கேஷ்கர் போட்ட பதிவு.! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.!
பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவு இந்தியாவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பற்றிய நினைவலைகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர். தமிழில் வளையோசை, ஆராரோ ஆராரோ, எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் உட்பட பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.
லதா மங்கேஷ்கரை விட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு வயது மூத்தவர். இருவரும் சம காலத்து கலைஞர்கள் என்பதால், சிவாஜி கணேசன், லதா மங்கேஷ்கர் இடையே நல்ல நட்புறவு இருந்துள்ளது. சிவாஜி கணேசனின் ஒவ்வொரு பிறந்த நாளையொட்டி லதா மங்கேஷ்கர் சமூக வலைதளங்களில் வாழ்த்து சொல்வது வழக்கம்.
கடந்த ஆண்டு சிவாஜி கணேசனின் பிறந்த தினத்தை முன்னிட்டு லதா மங்கேஷ்கர் அவரது முகநூல் பதிவில், "நேற்று சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாள். நான் அவரை அண்ணா என்றுதான் எப்போதும் அழைப்பேன். அவர் இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற பொக்கிஷம். அவர் என்னை தங்கையாக ஏற்றுக் கொண்டதை நான் பெற்ற பாக்கியமாக கருதுகிறேன். அவரது மகன்கள் ராம்குமார் மற்றும் பிரபு, அவர்களது சகோதரிகள் என்மீது மிகுந்த அன்பு வைத்துள்ளனர். அவர்களின் வழியே நான் சிவாஜி அண்ணனும், கமலா அண்ணியும் என்னுடன் இருப்பதை உணர்கிறேன். சிவாஜி கணேசன் என்ற இந்த மாபெரும் கலைஞருக்கு எனது கூப்பிய கரங்களுடன் எனது பணிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.