#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
லதா மங்கேஷ்கர் தமிழில் தான் பாடிய முதல் பாடலுக்கு சம்பளமே வாங்கவில்லை.! என்ன காரணம் தெரியுமா.?
பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவர் குறித்த நினைவுகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இவர் தமிழில் வளையோசை, ஆராரோ ஆராரோ, எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் உட்பட பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.
லதா மங்கேஷ்கர் தமிழில் தான் பாடிய முதல் பாடலுக்கு சம்பளமே வாங்காமல் பாடிக்கொடுத்தாராம். ஆனந்த் என்கிற படத்தில் இடம்பெறும் ஆராரோ ஆராரோ என்கிற பாடலைத் தான் அவர் சம்பளமே வாங்காமல் பாடினாராம்.
அந்த படத்தில் பிரபு தான் ஹீரோவாக நடித்திருந்தார். சிவாஜி மகனின் படம் என்பதால், என் அண்ணனுக்காக இலவசமாக பாடுகிறேன் என்று சொன்னாராம் லதா மங்கேஷ்கர். இதுகுறித்து சிவாஜியின் மகன் பிரபு கூறுகையில், அண்ணன் ராம்குமார் தான் ஆனந்த் படத்தில் லதா மங்கேஷ்கர் பாடியே ஆக வேண்டுமென்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்தார். லதா மங்கேஷ்கர் எங்கள் அழைப்பை ஏற்று ஆனந்த் படத்தில் ஆராரோ ஆராரோ பாடலைப் பாடிச் சென்றார் என தெரிவித்துள்ளார்.