மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. லெஜெண்ட் சரவணா இது.! நியூ லுக்கில் ஆள் அடையாளமே தெரியலையே! ட்ரெண்டாகும் புகைப்படம்!!
பிரம்மாண்ட சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் உரிமையாளரான சரவணன் அருள் தனது கடை விளம்பரங்களில் நடித்து மக்களிடையே பிரபலமானார். இவர் பல உருவக்கேலிகளை சந்தித்தாலும் அதனை பொருட்படுத்தாமல் ஹீரோவாக அவதாரம் எடுத்து தி லெஜன்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் ஹீரோயினாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தாலே நடித்தார்.
மேலும் அவர்களுடன் விவேக்,
ரோபோ சங்கர், தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். இந்தப் படத்தை ஜேடி ஜெர்ரி இயக்கியிருந்தார். படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற பல மொழிகளிலும் வெளிவந்து நல்ல விமர்சனத்தையே பெற்றது.
இந்நிலையில் தி லெஜெண்ட் திரைப்படம் மார்ச் 3 டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. மேலும் விரைவில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என லெஜெண்ட் சரவணா கூறியுள்ளார். இதற்கிடையில் தற்போது அவர் கொஞ்சம் தாடி வைத்து புதிய லுக்கில் அடையாளமே தெரியாமல் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.
New Transition…
— Legend Saravanan (@yoursthelegend) March 13, 2023
Details Soon…#Legend #TheLegend #LegendSaravanan #NewEraStarts pic.twitter.com/gws9HR7j8O