திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஜெயிலரை பின்னுக்கு தள்ளியதா லியோ.. 5ஆவது நாள் வசூல் நிலவரம்.!
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியானது லியோ திரைப்படம். படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், தற்போது 5ஆவது நாள் வசூல் குறித்த விவரத்தை திரைப்பட வர்த்தக ஆய்வாளர் மனோபாலா விஜயபாலன் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, லியோ வெளியான முதல் நாள் வசூல் 27.63கோடியும், இரண்டாம் நாள் 15.95 கோடியும், மூன்றாம் நாள் 13.32கோடியும், நான்காம் நாள் 12.79கோடியும், ஐந்தாம் நாளான இன்று (அக்டோபர் 24) 9.51கோடியும் வசூலித்துள்ளதாக மனோபாலா விஜயபாலன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
லியோ திரைப்படம் தமிழ் திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸில் முதல் ஐந்து நாட்களில் 75கோடி வசூலைத் தாண்டியுள்ளதாகவும், அதேநேரம் ஜெயிலர் திரைப்படம் இதே ஐந்து நாட்களில் 122.83 கோடியை வசூலித்துள்ளது என்றும் விஜயபாலன் தெரிவித்துள்ளார்.
அதே சமயம், இந்திய அளவில் லியோ திரைப்படம் ரிலீசான ஆறாவது நாளில் 250கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இன்று 28கோடி வசூல் செய்தால், ஒரு வாரத்தில் 244.59கோடி வசூல் செய்த சாதனை படைக்கும் என்று இந்திய திரைப்பட வர்த்தக போர்டல் சாக்னில்க் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.