திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இண்டஸ்ட்ரி பிளாக்பஸ்டர்.. வசூலில் லியோ படைத்த சாதனைகள்.! படக்குழு வெளியிட்ட வேற லெவல் போஸ்டர்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறக்கும் தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி உலகளவில் வெளியானது. லியோ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார்.
மேலும் சஞ்சய் தத், அர்ஜுன், மடோனா செபாஸ்டியான், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. படம் வெளியாகி 25 நாட்களாகும் நிலையில் 540 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது.
இந்நிலையில் இண்டஸ்ட்ரி பிளாக்பஸ்டர் என குறிப்பிட்டு லியோ படம் வசூலில் படைத்த சாதனைகளை பட்டியலிட்டு 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் போஸ்டர் வெளியிட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.