திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
யூடியூபில் சாதனை படைத்த விஜய்யின் லியோ படத்தின் முதல் பாடல்.!
லியோ படத்தில் இடம் பெற்றுள்ள 'நா ரெடி' பாடல் யூடியூபில் 10 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தை நிறைவு செய்துள்ளார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தில் திரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின் கௌதம் மேனன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.
லியோ திரைப்படம் ரிலீஸாக 2 மாதங்களே உள்ள நிலையில், போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே லியோ படத்தில் அடுத்தடுத்த அப்டேட்டுகளையும் வெளியிட்டு வருகிறது.
அதன்படி, லியோ படத்தில் நடித்துள்ள சஞ்சய் தத் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் கதாபாத்திரங்களின் க்ளைம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் லியோ படத்தில் விஜய் பாடிய 'நா ரெடி' எனத் தொடங்கும் பாடல் கடந்த ஜூன் 22 ஆம் தேதி வெளியாகிய ரசிகர்களையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் யூடியூபில் இந்த பாடல் 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.