திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"நெட்பிளிக்சில் வெளியானது ஓணானும், ஆமையும் நடித்த லியோ" பட ட்ரைலர்!" கலாய்த்த நெட்டிசன்கள்..
சமீப காலமாக ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது. இந்நிலையில் அனிமேஷன் நகைச்சுவைத் திரைப்படமான "லியோ" படத்தின் ட்ரைலர் நெட்பிளிக்சில் வெளியாகியுள்ளது.
ஆடம் சாண்ட்லர் 'லியோ' கதாப்பாத்திரத்தில் 74 வயதானவராக நடிக்கிறார். மேலும் பில் பர் லியோவுடன் வாழும் ஸ்கிர்ட்டில் என்ற ஆமையாக நடிக்கிறார். புளோரிடாவில் ஒரு தொடக்கப்பள்ளியின் வகுப்பறையில் ஒரு வயதான பல்லி மற்றும் ஆமை இரண்டும் செல்லப்பிராணிகளாக வாழ்கின்றன.
பல தலைமுறைகளாக வகுப்பறையில் வாழ்ந்துவரும் லியோ மற்றும் ஸ்கிர்ட்டில், திடீரென வெளியுலகத்தை அனுபவிக்க விரும்புகின்றனர். அதோடு தான் இன்னும் 1 வருடம் தான் உயிர் வாழ முடியும் என்று அறிந்துகொண்ட லியோ அங்கிருந்து தப்பிக்க எடுக்கும் முயற்சிகள் என்னானது என்பதே கதை.
ராபர்ட் ஸ்மிகல், ராபர்ட் மரியானெட்டி, டேவிட் மரியானெட்டி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். ஹேப்பி மேடிசன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், ஒரே வாரத்தில் நெட்பிளிக்சில் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் 34.6 மில்லியன் பார்வைகளுடன் பெரும் சாதனை படைத்துள்ளது. இப்படத்தை குறித்து விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தை வைத்தும், அஜித்தை வைத்தும் நெட்டிசன்கள் கலாய்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.