திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வட இந்தியாவில் லியோ படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்.. கலக்கத்தில் படக்குழு.!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. இந்தத் திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்க, ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குனர் கௌதம் மேனன் மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. பான் இந்தியன் படமாக வெளியாகும் லியோ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்டா பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் லியோ படத்தை வட இந்தியாவில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்களில் வெளியிடுவதில் புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதன்படி அங்குள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகி 8 வாரங்கள் கழித்து ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களை மட்டும் தான் தங்கள் மல்டிபிளக்ஸ் திரையரங்களில் ரிலீஸ் செய்வது என்ற முடிவை எடுத்துள்ளனர்.
ஆனால் லியோ திரைப்படம் ரிலீசான 4 வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் ரிலீஸ் செய்ய நெட்லிக்ஸ் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் வட இந்தியாவில் லியோ திரைப்படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.