திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"லியோ வெற்றி விழாவில் சர்ச்சை பேச்சு! சோசியல் மீடியாவுக்கு டாட்டா சொன்ன இயக்குனர்!"
மேயாத மான், ஆடை, குளுகுளு ஆகிய மூன்று படங்களை இயக்கியவர் ரத்னகுமார். இவர் தான் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "லியோ" திரைப்படத்திற்கு வசனகர்த்தாவாக இருந்தவர் என்பது கவனிக்கத்தக்கது.
ஏற்கனவே ரசிகர்களிடம் பிரபலமான ரத்னகுமார், ஆரம்பத்தில் இருந்தே லியோ படம் குறித்த அப்டேட்டுகளை வெளியிட்டு வந்தார். படம் குறித்த அவர் சமூகவலைத்தளத்தில் போட்ட பதிவுகள் எல்லாம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றன.
படத்தின் பாதியை ரத்னகுமார் தான் இயக்கினார் என்று சர்ச்சை எழுந்த நிலையில், நேற்று சென்னை உள்விளையாட்டு அரங்கில் லியோ படத்தின் வெற்றி விழா நடந்தது. அதில் ரத்னகுமார் பேசியது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதில் பேசிய அவர், "விஜய் எல்லோரையும் சமமாக நடத்துவார். எவ்வளவு உயர பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தான் ஆகவேண்டும்" என்று பேசினார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. எனவே ரத்னகுமார் "எனக்கு எழுத்துப்பணி உள்ளதால் சிறிது காலம் இடைவெளி விடுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.