மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நடிகர் லோகேஷ் இப்ப என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா! வைரலாகும் வீடியோ! பிரமித்துபோன பிரபலம்!
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தவர் லோகேஷ் பாபு. இவர் ஆதித்யா தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லோகேஷ் பிரைன் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்பொழுது நடிகர் விஜய் சேதுபதி அவரை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்து, தேவையான மருத்துவ உதவிகளை வழங்கினார். மேலும் ரசிகர்கள் லோகேஷ் விரைவில் குணமடைய வேண்டுமெனவும் பிரார்த்தனைகள் மேற்கொண்டனர்.
Thank you dear Lokesh sir for this. You look so beautiful and energetic with your awesome moves. An absolute king! Wishes for great health 🤗 https://t.co/YZ3AThAdFN
— Santhosh Narayanan (@Music_Santhosh) August 11, 2020
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன லோகேஷ் தற்போது வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டுள்ளார். மேலும் அவர் விஜே பார்வதியுடன் ஜகமே தந்திரம் படத்தின் ரகிட ரகிட என்ற பாடலுக்கு தற்போது நடனமாடியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலான நிலையில் அதனை கண்ட அப்படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பிரமித்துப் போய், டியர் லோகேஷ் சார் இதற்கு ரொம்ப நன்றி. உங்களின் அருமையான அசைவுகளால் நீங்கள் சுறுசுறுப்பாகவும், அழகாகவும் இருக்கிறீர்கள். ஒரு முழுமையான ராஜா. உங்களது சிறந்த ஆரோக்கியத்திற்கு எனது வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.