மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நிச்சயம் பண்ணுவேன்! எனக்கும் அந்த ஆசை இருக்கு.! இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அதிரடி முடிவு! என்ன தெரியுமா??
தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். அதனை தொடர்ந்து அவர் கைதி, மாஸ்டர் போன்ற படங்களை இயக்கி இருந்தார். இப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று செம ஹிட்டானது. மேலும் இறுதியாக அவர் விக்ரம் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
இப்படத்தில் ஹீரோவாக கமல் நடித்துள்ளார். மேலும் இதில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனையும் வாரி இறைத்தது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் நடிப்பில் தளபதி 67 படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் விஜய் கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற போதை பழக்கம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்பொழுது அவரிடம், ஏஜென்ட் டீனாவின் கதையை படமாக எடுப்பீர்களா என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு லோகேஷ், எனக்கும் ஆசை இருக்கு. பெண்களுக்கு முக்கியத்துவமாகமே அந்த காட்சியை வைத்தேன். இனி வரவிருக்கும் படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு கூடுதலாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு நிறையவே உள்ளது. வரும் காலங்களில் ஏஜென்ட் டீனாவின் முன் கதைக்கும் சரியான கதை தோன்றினால் நிச்சயம் பண்ணுவேன் என கூறியுள்ளார்.