திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"எனது பெயரில் உள்ள கணக்குகளை பேஸ்புக்கில் பின் தொடர வேண்டாம்!" லோகேஷ் கனகராஜ் வேண்டுகோள்!
இயக்குனராகவும், திரைக்கதை ஆசிரியராகவும் இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் 2017ம் ஆண்டு "மாநகரம்" திரைப்படத்தை இயக்கியிருந்தார். தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட பிளாக் பஸ்டர் படங்களை இயக்கி தமிழின் முன்னணி இயக்குனராக உள்ளார்.
மேலும் "வெள்ள ராஜா" என்ற வெப் தொடருக்கு திரைக்கதை எழுதியுள்ளார். சமீபத்தில் விஜயை வைத்து இவர் இயக்கிய "லியோ" திரைப்படம் 500கோடிகளுக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. மேலும் இவர் இயக்கிய மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களில் ஒரு சிறிய ரோலில் நடித்துள்ளார் லோகேஷ்.
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் பெயரிலான பேஸ்புக் பக்கத்தை, சில மர்ம நபர்கள் ஹேக் செய்து, அதில் சில ஆபாச வீடியோக்களை பதிவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இதுகுறித்து தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, "எனக்கு X மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் மட்டும் தான் கணக்கு உள்ளது. வேறு எந்த சமூக வலைத்தளங்களையும் நான் உபயோகிக்கவில்லை. எனவே எனது பெயரில் உள்ள போலி கணக்குகளை யாரும் பின்தொடர வேண்டாம்" என்று கூறியுள்ளார்.