#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ரசிகர்களை ஏமாற்றிய லோகேஷ் கனகராஜ்.. அதிருப்தியில் ரசிகர்கள்.!
கடந்த அக்டோபர் 19ம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது லியோ திரைப்படம். இப்படத்தில் லியோவுக்கான பிளாஷ்பேக் காட்சிகள் இன்னும் கொஞ்சம் விரிவாக இருந்திருக்க வேண்டும் என்பதே படம் குறித்த பலரின் கருத்தாக இருக்கிறது.
படத்தில் மன்சூர் அலிகான் தான் லியோவின் பிளாஷ்பேக்கை விவரிப்பார். இந்நிலையில் தற்போது இயக்குனர் லோகி, "அவை மன்சூர் அலிகானின் பார்வையில் தான் சொல்லப்பட்டது என்றும், அது உண்மையாக இருக்கவேண்டிய அவசியமில்லை" என்றும் கூறியிருப்பது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு திரைப்படம் வெளியாகி இத்தனை நாட்களுக்குப் பின் அப்படத்தின் பாதி கதை பொய் என்று கூறினால், அதை எப்படி எடுத்துக்கொள்வது என்று ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ் மீது அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் வெற்றி மாறனின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் வெற்றிமாறன், " ஒரு படம் வெளியாகி மக்கள் முன் வைக்கப்பட்ட பிறகு சொல்லப்படும் எந்த காரணங்களாலும் பயனில்லை. படத்தில் எதை வைக்க வேண்டும், எதை நீக்க வேண்டும் என்ற தெளிவு இருப்பதே ஒரு நல்ல இயக்குனருக்கு அடையாளம்" என்று கூறியுள்ளார்.