"லோகேஷ் குறித்து வெளியான வதந்தி!" விரைவில் பிரஸ் மீட்!



Lokesh openup about gossips

2017ம் ஆண்டு "மாநகரம்" படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படங்களை இயக்கி தமிழின் மிகவும் கவனிக்கப்படுகிற இயக்குனராக மாறியுள்ளார். 

Leo

இவர் இயக்கிய நான்கு படங்களுமே மிகப்பெரிய அளவில் வசூலில் சாதனை படைத்துள்ளன. அதிலும் கடந்த அக்டோபர் 19ம் தேதி விஜய் நடிப்பில் வெளியான "லியோ" திரைப்படம் மாபெரும் பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்டாக அமைந்துள்ளது. ஆனால் விமர்சன ரீதியாக சற்று பின் தங்கியுள்ளது.

விஜய், திரிஷா, கெளதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்திருந்த லியோ திரைப்படம் இதுவரை கிட்டத்தட்ட 550கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது லியோ படத்திற்கு லோகேஷ் கனகராஜிற்கு சம்பள பாக்கி உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

Leo

ஆனால் லோகேஷிற்கு முழு சம்பளமும் தந்துவிட்டதாகவும், அவர் தயாரிப்பாளரோடு சுமுக உறவில் இருப்பதாகவும் நெருங்கிய நட்பு வட்டத்தில் கூறிய லோகேஷ் இந்த வதந்தியால் மிகவும் அப்செட்டில் இருக்கிறாராம். விரைவில் பிரஸ் மீட் வைத்து இதுபற்றி விளக்கப்போவதாக தெரிய வந்துள்ளது.