ரஜினியின் அடுத்த திரைப்படத்தைப் பற்றி புதிய அப்டேட்டை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்.!



LokeshKanagarajhasgivenanewudateaboutRajinikanthsnextfilm

தமிழ் திரையுலகிற்கு மாநகரம் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர்தான் லோகேஷ் கனகராஜ். அதன் பிறகு நடிகர் கார்த்தியை வைத்து கைதி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதன் பிறகு உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கினார். அதேபோல சமீபத்தில் தளபதி விஜயை வைத்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கினார். இப்படி அவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களுமே அடுத்தடுத்து சூப்பர், டூப்பர் ஹிட் கொடுத்தது. இந்த நிலையில் தான், அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இந்த திரைப்படத்தின் கதையை லியோ திரைப்பட படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது ரஜினியிடம் சொல்லி சம்மதம் வாங்கி விட்டாராம் லோகேஷ் கனகராஜ். தற்போது ரஜினிகாந்த் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு மாதத்தில் முழுமையாக முடிவடையவுள்ளது என சொல்லப்படுகிறது.

lokeshkanagaraj

ஆகவே அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படத்தில் அவர் ஒப்பந்தமாகியிருக்கிறார். இது பற்றி பேசிய லோகேஷ் கனகராஜ், இந்த திரைப்படம் அதிரடி, ஆக்ஷன் த்ரில்லராக உருவாகவிருப்பதாகவும், இந்த திரைப்படத்தின் ஸ்க்ரிப்ட் தொடர்பான பணிகளை இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் முடித்து விடுவேன் எனவும் எதிர்வரும் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் கூறியிருக்கிறார்.

அதோடு இந்த திரைப்படத்தின் பணிகள் தொடர்பாக ரஜினிகாந்த் தனக்கு கால் செய்து கேட்டறிவார் எனவும், தான் ஏதாவது ஒரு வித்தியாசமான முயற்சியை முன்னெடுத்தாலும் அது அவருக்கு தெரிந்து விடும் என கூறினார். அதோடு இந்த திரைப்படத்தில் அதிக அளவிலான ஆக்ஷன் காட்சிகளை பயன்படுத்த இருப்பதாகவும் வெகு நாட்களுக்குப் பின்னர் இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்தை ஆக்ஷன் காட்சிகளில் பார்க்கலாம் எனவும் லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டிருக்கிறார்.

lokeshkanagaraj

இதுவரையில் முயற்சி செய்யாத வித்தியாசமான முறையில் இந்த திரைப்படத்தை இயக்கயிருப்பதாகவும் இந்த திரைப்படத்தின் ஸ்கிரிப்ட்டை கேட்டுவிட்டு ரஜினிகாந்த் மிகவும் சந்தோஷப்பட்டார் என்றும் கூறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.