#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கவினை வெறுப்பேற்ற லாஸ்லியா செய்த செயல்.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.!
இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்த போது லாஸ்லியாவுக்கும், சக போட்டியாளரான நடிகர் கவினுக்கும் இடையே காதல் மலர்ந்திருப்பது போல் தெரிந்தது.
ஆனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த பிறகு, இருவரும் தங்களுக்குள் எந்த சம்மந்தமும் இல்லை என்பதுபோல் நடந்துகொண்டனர். இதனால் கவின்-லாஸ்லியா இருவரும் பிரிந்து விட்டனர் என்று பிக் பாஸ் ரசிகர்கள் கூறினர்.
இந்நிலையில், சமீபத்தில் கவின் தனது நீண்ட நாள் தோழியான மோனிகாவை திருமணம் செய்து கொண்டார். அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களிலும் கவின் பதிவேற்றினார். இதைப் பார்த்த லாஸ்லியா "எனக்கு இதைப் பார்த்து மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது" என்று பதிவிட்டிருந்தார்.
தற்போது லாஸ்லியா, மற்றொரு பிக் பாஸ் பிரபலமான தர்ஷனுடன் குட்டைப் பாவாடையணிந்து நெருக்கமாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கவினை வெறுப்பேற்ற தான் லாஸ்லியா இந்தப் புகைப்படத்தை பதிவிட்டுள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.